”விவேகம் முக்கியம் அல்ல, வேகம் தான் முக்கியம்”.. மாணவர்களுக்கு அறிவுரை கூறிய தமிழிசை
தெலுங்கானா கவர்னர் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன், “தற்போதைய காலத்தில் விவேகத்தை விட வேகம் தான் முக்கியம்” என மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
முன்னதாக பாஜகவின் தமிழக தலைவராக இருந்த டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன், சமீபத்தில் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மதுரை மருத்துவ கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழிசை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, “தற்போதைய காலத்தில் விவேகத்தை விட வேகம் தான் தேவை எனவும், தேர்வு நடைபெறுவதற்கு முன்பு படித்தால் எந்த நன்மையும் இல்லை, அன்றன்றே பாடங்களை படிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.