திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (10:18 IST)

சிதம்பரம் குடும்பமே இப்படித்தான்.. பொங்கி எழும் தமிழிசை

ப சிதம்பரத்தை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் சர்ச்சையான கருத்தை பேசியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கிலும் கைது செய்யப்படலாம் என்பதால், முன் ஜாமீன் கோரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ப சிதம்பரத்திற்கு ஆகஸ்து 28 வரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முடிவில் ஆகஸ்து 29 வரை இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ப சிதம்பரத்தை குறித்து, வேலூரில் ஒரு ஆலோசனை கூட்டத்தில் பேசிய தமிழிசை, ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஏன் பெறப்பட்டது என கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் பொருளாதார மேதை என கூறப்பட்ட ப சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது 5 முறை ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வாங்கினார். ஆனால் அவர் இந்த நாட்டுக்கு எதுவுமே செய்யவில்லை. அவர் இந்த நாட்டுக்கே பாரமாகத் தான் இருந்தார் என்று ஆவேசமாக கூறினார்.

மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில், தவறு செய்பவர்கள் மோடி ஆட்சியில் தப்பிக்க முடியாது. ப சிதம்பரத்திற்கு திகார் ஜெயில் தயாராகி வருகிறது. அவருடைய குடும்பமே ஒரு ஜாமீன் குடும்பம் என குற்றம் சாட்டியுள்ளார். தமிழிசை சௌந்தரராஜனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.