ரஜினி கட்சியுடன் இணையும் காந்திய மக்கள் இயக்கம்?
நடிகர் ரஜினி துவக்க உள்ள கட்சியுடன், காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க தமிழருவி மணியன் முடிவு செய்துள்ளார் என தகவல்.
ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சியில் தொடங்கி அரசியலில் ஈடுபடுவதை உறுதி செய்தார். டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிப்பேன் என்றும் வரும் தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கூறினார்.
மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி அவர்களும் தலைமை ஆலோசகராக தமிழருவி மணியன் அவர்களையும் அவர் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் ரஜினி துவக்க உள்ள கட்சியுடன், காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க, ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர், தமிழருவி மணியன் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காந்திய மக்கள் இயக்கத்தில் உள்ள அனைவரும், ரஜினி கட்சி துவக்குகிற மாநாட்டில் ரஜினியின் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.