ரஜினிக்கு எதிராக திமுக களமிறக்கும் பிரபல நடிகர்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது வருகையால் அதிமுகவை விட திமுகவுக்குதான் அதிக பாதிப்பு இருக்கும் என கருதப்படுகிறது
பொதுவாக ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் திமுகவுக்கு ஓட்டு போடலாம் என்று நினைத்திருந்த நிலையில் தற்போது ரஜினி வருவதால் புதுமுகத்திற்கு ஓட்டுபோட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் ரஜினிக்கு செல்வதால் திமுகவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் கருதப்பட்டது
இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு எதிராக திரையுலக பிரபலங்களை இறக்க திமுக திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது சத்யராஜை திமுக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் ரஜினிக்கு எதிராக பேசுவதற்கு சரியான நபர் என்று திமுக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே ரஜினியின் அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய சத்யராஜ் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தால் அது ரஜினிக்கு பின்னடைவாக இருக்குமா? திமுகவுக்கு சாதகமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
அதேபோல் இயக்குநர் கரு பழனியப்பன் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது