திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (08:10 IST)

நிவர் புயல் எங்கு கரையை கடக்கும்? வெதர்மேன் ரிபோர்ட்!!

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் குறித்து தமிழக வெதர்மேன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். 
 
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது என்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்றிரவு கரையை கடைக்கும் என கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து தமிழக வெதர்மேன் கூறியுள்ளதாவது, இந்த புயல் வலுவிழந்தால் அது டெல்டா பக்கம் திரும்பலாம். ஆனால், இது தீவிரமாக இருப்பதால் டெல்டா பக்கம் திரும்ப வாய்ப்பு இல்லை. மகாபலிபுரத்துக்கும் சென்னைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் சிறிறு மாற்றம் என்றாலும் இந்தபுயல் சென்னையில் கரையை கடக்கலாம். 
 
இதனால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமழை மற்றும் வேலூருக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.