செவ்வாய், 4 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (07:40 IST)

எழும்பூர் வடக்கு பஸ் நிலையம் இன்று முதல் மாற்றம்.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இன்று முதல்  வடக்கு பஸ் நிலையம் மாற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.  

எழும்பூரில் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு பஸ் நிலையங்கள் உள்ள நிலையில் பிராட்வே, திருவொற்றியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வடக்கு பஸ் நிலையத்திற்கு பேருந்துகள் வருகின்றன.  

இந்நிலையில் வடக்கு பஸ் நிலையம் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  வடக்கு பஸ் நிலையம் வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை செல்லும் பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் மெட்ரோ ரயில் நிலையம் முன்பு நின்று பயணிகளை  ஏற்றி இறக்கி  செல்லும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி, எழும்பூர் வடக்கு பஸ் நிலையம் வழியாக செல்லக்கூடிய 15, 15பி, 15சி, 15 எப், 15ஜி, 20, 20ஏ, 20 டி, 101, 101எக்ஸ், 53, 71, 120 ஏ, 120 இ, 120 கே, 150 உள்பட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும், இன்று முதல் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லும் எ

அதேபோல் வடக்கு பஸ் நிலையத்தை கடைசி நிறுத்தமாக கொண்டுள்ள 28, 28ஏ, 28பி ஆகிய வழித்தட பஸ்கள், மணியம்மை சிலை அருகே நிறுத்தப்படும்..

Edited by Siva