வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (09:10 IST)

இன்னைக்கு ரொம்ப நல்ல நாளாம்! – ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்யும் ஸ்டாலின், எடப்பாடியார் மற்றும் பலர்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று ஒரே நாளில் பல ஸ்டார் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை உறுதி செய்த நிலையில் பல கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று முகூர்த்த நாளாகவும், நல்ல நாளாகவும் அமைந்துள்ளதால் இன்றே பல முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று எடப்பாடியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மு.க.ஸ்டாலின் மதியம் 12.30 அளவில் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலிம் சேப்பாக்கம் தொகுதிக்கு 12 மணி அளவிலும் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், மற்றும் பல அமைச்சர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட தொகுதியிலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியிலும், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.