பிப்ரவரி முதல் அனைத்து வகுப்புகளும் திறப்பு..? – மாலை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி முதல் பள்ளிகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இந்த ஜனவரி மாதத்தில் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. பொங்கலுக்கு முன்பாக ஒமிக்ரான் பரவல் தீவிரமடைய தொடங்கியதால் மீண்டும் ஜனவரி 31 வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி 31க்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுமா என்று எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.