திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (11:45 IST)

தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன! – சப்ளை செய்யும் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவிய நிலையில் இன்று மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தடுப்பூசியில் முன்கூட்டியே 20 லட்சம் தடுப்பூசிகளை அவசரமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையில் நேற்று மாலை 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன.

இந்நிலையில் தற்போது மேலும் 2 லட்சம் கோவாக்சின் மற்றும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்துள்ளதாக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள இந்த தடுப்பூசிகள் தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பபடும் என கூறப்படுகிறது.