வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 24 ஏப்ரல் 2021 (11:35 IST)

தமிழகத்தில் ஏழு மாதங்களுக்கு பிறகு நாளை முழு ஊரடங்கு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
 
இதனால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு மக்களை பாதுக்காப்பாக இருக்க அரசு வலியுறுத்தி வருகிறது. 
 
அதன்படி இன்று இரவு 10 மணி முதல் திங்கள் காலை 4 மணி  வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. முழு ஊரடங்கை முன்னிட்டு 16 சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளது தெற்கு ரயில்வே.