செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (15:04 IST)

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்..! – வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்..! – வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும், நாளையில் பல மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி டெல்டா பகுதிகளான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்றும்,

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு,திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K