புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 மார்ச் 2020 (10:46 IST)

கேரளா நபருடன் வந்த 47 தமிழர்கள்: கொரோனா அபாயம்!

பஹ்ரைனிலிருந்து கேரளா வந்த நபருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவரோடு 47 தமிழர்களும் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஹ்ரைனிலிருந்து கேரளா வந்த விமானத்தில் பயணித்த கேரளாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடஹி தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பயணித்த விமானத்தில் அவரோடு 47 தமிழர்கள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற பீதி எழுந்துள்ள நிலையில் அவர்களது விவரங்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் வீடுகளில் இருந்தபடியே கவனிக்கப்படுவார்கள் என்றும் தமிழக பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு சென்னைக்கு வரும் 19 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.