வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 15 மார்ச் 2020 (09:40 IST)

இந்தியாவில் 100ஐ தொட்டது கொரோனா: பாதுகாப்பு நடவடிக்கையை மீறி பரவுவதால் பரபரப்பு

சீனா, இத்தாலி உள்பட சுமார் 125 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில் இந்த வைரஸ் காரணமாக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் கொரோனா முதன் முதலாக கடந்த மாதம் இந்தியாவிற்குள் நுழைந்தது. முதலில் இருபது பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது படிப்படியாக உயர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா வைரசால் இரண்டு பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும், அதனையும் மீறி கொரோனா வைரஸ் பரவி வருவது இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும், திரையரங்குகள் மால்கள் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன என்பதும் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது