தமிழகம் உறுதிமொழி எடுக்க வேண்டும்: ராஜேஷ் லக்கானி
தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் பணம் பெற மாட்டோம், கொடுக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று ராஜேஷ் லக்கானி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பணம் பட்டுவாடா நடப்பதை கண்காணிக்க தலைமை தேர்தல் அணையர் நஜிம் ஜைதி மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராஜேஷ் லக்கானி, "தமிழக சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள், மொத்தம் 69 இடங்களில் எண்ணப்பட உள்ளது, இதுவரை தமிழகத்தில் மொத்தம் ரூபாய் 81.85 கோடி பண்ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஆகியோர் பணம் பெற மாட்டோம், கொடுக்க மாட்டோம், என்று மே 10ஆம் தேதி காலை 10 மணி அளவில் உறுதி மொழி எடுக்க வேண்டும்" என்று லக்கானி கூறினார்.