1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu may get rain by cyclone in andaman

அந்தமானில் புயல் ; 2 நாட்களுக்கு கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை

Andaman
அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என வானிலை மையம் அறிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை, கடலூர், நாகை, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. சில நேரங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
 
இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் தீவுகள் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது. இன்று மாலைக்குள் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  மாற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
 
அப்படி நடந்தால், தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆதாரை ஒழிப்போம்: ப.சிதம்பரம்