நாட்டிலேயே சிறப்பான ஆட்சி தரும் மாநிலங்கள்! – தமிழகம் இரண்டாவது இடம்!

Prasanth Karthick| Last Modified சனி, 31 அக்டோபர் 2020 (11:07 IST)
நாட்டிலேயே சிறப்பான ஆட்சி செய்யும் மாநிலங்கள் குறித்த பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

இந்தியாவில் மக்களுக்கு சிறப்பான ஆட்சியை அளிக்கும் மாநிலங்களை பட்டியல் தயாரிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் பொருளாதார, கல்வி வளர்ச்சியை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பான ஆட்சியை அளிப்பதாக தெரிய வந்துள்ளது.

அதன்படி நாட்டில் சிறப்பான ஆட்சி அளிக்கும் மாநிலங்களில் கேரளா முதல் இடத்தை பெற்றுள்ளது. தமிழகம் இரண்டாவது இடத்திலும், ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு மூன்றாவது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களை தென்னிந்திய மாநிலங்கள் பெற்றுள்ள நிலையில் கடைசி இடங்களில் உத்தர பிரதேசம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன.இதில் மேலும் படிக்கவும் :