1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (12:26 IST)

தமிழக அரசின் அலங்கார வாகனம் நிராகரிப்பு – மத்திய அரசு முடிவால் அதிர்ச்சி!

தமிழக அரசின் குடியரசு தின விழா அலங்கார வாகனம் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குடியரசு தின விழா ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக டெல்லியில் நடைபெறும் குடியரசு விழா கொண்டாட்டத்தில் 24 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 4வது சுற்று வரை சென்ற தமிழக அரசின் வாகனத்தில் வ.உ.சி, வேலுநாச்சியார் படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் தேசிய அளவில் பிரபலமான தலைவர்கள் படங்கள் இல்லையென நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.