1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 8 நவம்பர் 2017 (19:40 IST)

தமிழ் கற்க துவங்கிய தமிழக ஆளுநர்!!

புதிய தமிழக ஆளுநராக பதவியேற்றுள்ள பன்வாரிலால் புரோகித் மக்களிடம் எளிதாய் உரையாட தமிழ் மொழியை கற்றுக்கொண்டுள்ளாராம். 


 
 
தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள்ச் பன்வாரிலால் புரோகித் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவா். ஆங்கிலம், மராட்டியம், இந்தி ஆகிய மொழிகளில் சரலமாக பேசக்கூடியவர். 
 
இவர் ஆங்கில பத்தரிக்கை ஒன்றிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் தற்போது தமிழ் மொழி மீது அன்பு கொண்டு தமிழை கற்கத் துவங்கியுள்ளாராம். 
 
தமிழ் ஆசிரியா் ஒருவா் தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கிறாராம். மக்களிடையே எளிதாக உரையாட இந்த பயிற்சி பயன்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.