1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 8 நவம்பர் 2017 (18:01 IST)

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு தாவிய பிரபல டிவி தொகுப்பாளினி

பிரபல டிவி தொகுப்பாளினி ரம்யா சங்க தலைவன் என்னும் படத்தில் நடிக்கிறார். சின்னத்திரையில் கலக்கிய ரம்யா, விளாயாட்டிலும் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் பவர் லிப்டிங் போட்டியில் கலந்து கொண்டு இரட்டைத் தங்கப் பதக்கம்  வென்றுள்ளார்.

 
தமிழ் சேனல்களில் இப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் டிடி,  அஞ்சனா, ரம்யா என பெண் தொகுப்பாளினிகள் கலக்கி வருகிறார்கள். இதில் அவர்களுக்கு சினிமா வாய்ப்புக்களும் சிக்கி விடுகிறது. ஏற்கனவே டிடி நிகழ்ச்சி, சினிமா என கலக்கி வருகிறார். தொகுப்பாளினி ஏற்கனவே ஓகே கண்மணி, மாசு என்கிற  மாசிலாமணி, வனமகன் படத்தில் கேரக்டர் ரோல்கள் செய்துள்ளார்.
 
இயக்குநர் சமுத்திரகனி நடிக்கும், ‘சங்க தலைவன்’ என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறராம் வெற்றி மாறன் இயக்கும் இப்படத்தில் கைத்தறி நெசவாளர்கள் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.