திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (09:04 IST)

மாணவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வேண்டாம்! – தமிழக அரசு உத்தரவு!

ஆகஸ்டு 15 அன்று இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதில் கலந்துகொள்ள வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் எதிர்வரும் ஆகஸ்டு 15 அன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழக செயலக கோட்டை கொத்தளத்தில் 15ம் தேதி காலை 08.45 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்ற உள்ளார். வழக்கமாக சுதந்திர தின விழாவிற்கு பள்ளி, கல்லூரிகளில் கொடி ஏற்றப்படுவதுடன், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

ஆனால் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழாவில் மானவர்கள் பங்கேற்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டு கொடியேற்றவும், வயது முதிர்ந்த ஆசிரியர்கள் நிகழ்வில் கலந்துக் கொள்வதை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் இனிப்புகளை விடுதிகளில் நேராக சென்று வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.