வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (23:59 IST)

தர்ப்பை புல்லின் பயன்கள் !

தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். 
 
கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம்  இருக்காது.
 
தர்ப்பை புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது. முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்போதும், அம்மாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கும்போதும் கையிலும் பிண்டத்தோடும் பயன்படுத்தப்படுவது, தர்ப்பை புல். அதற்கு அவ்வளவு மகிமை உள்ளது.
 
தர்ப்பை புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது. தர்பை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க  வல்லது.
 
தர்ப்பை புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது. நமது உடலில், வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது. தர்பைக்கு அக்னிகற்பம் என்பது பெயர். இந்த புல், தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர்.
 
அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்பை, மூலஸ்தூலம் உடையது அலி தர்பை, அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது, ஆண் தர்பை. ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்.