புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (15:31 IST)

நெருங்கி வரும் புரெவி புயல்; பயிர்காப்பீடு அவசியம்! – வேளாண் துறை அறிவுறுத்தல்!

வங்க கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ள நிலையில் தென் தமிழக விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ள நிலையில் மணிக்கு 13 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புதிய புயலுக்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த புயல் தென் தமிழக பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது 8 மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் புயல் சில நாட்களில் கரையை கடக்க இருப்பதால் விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. புயலால் விவசாய நிலங்கள், பயிர்கள் பாதிக்கப்பட்டால் பயிர் காப்பீடு செய்ததன் அடிப்படையிலேயே நிவாரணம் வழங்கப்படும் என்பதால் விவசாயிகள் தாமதிக்காமல் பயிர்காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.