1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu 29 districts have heavy rain

சில மணி நேரத்திற்குள் மொத்த தமிழகத்திலும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாக தமிழகத்தின் 29 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் “இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி முதற்கொண்டு டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் வரை 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!