கமல் நன்றி சொல்ல வேண்டியது யாருக்கு? தமிழிசையின் அதிரடி டுவீட்

Last Modified சனி, 16 ஜூன் 2018 (10:05 IST)
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கபினி அணை நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் தமிழகத்தின் தேவைக்காக திறந்துவிடப்பட்டதாக கர்நாடகம் கூறியது.
கர்நாடக முதல்வரின் இந்த கருத்துக்கு நன்றி கூறிய நடிகர் கமல்ஹாசன், இதேபோல் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட தொடங்கிய பிறகு, இரு மாநில நட்பால் அடைக்கப்பட்டிருக்கும் பல கதவுகள் திறக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

கர்நாடக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசனுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது, ''கர்நாடகத்தை ஆள்பவர் தண்ணீர் கொடுக்கவில்லை. ஆண்டவன் (ரங்கநாதர்) கொண்டு வந்த மழையால்தான் தண்ணீர் வந்திருக்கிறது. கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல! நம்ம ஊர் சாமிக்குத்தான்....என்று கூறியுள்ளார்.

Cauvery Issue
தமிழிசையின் இந்த டுவீட்டை விமர்சனம் செய்து டுவிட்டர் பயனாளிகள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றத்திற்கு செல்லாமல் ரங்க நாதரிடம் கூறியே காவிரியை வரவழைத்திருக்கலாமே போன்ற கருத்துக்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :