செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (22:06 IST)

இனிமேல் பெட்ரோல்-டீசல் விலை தமிழிசை கட்டுப்பாட்டிலா?

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜனுக்கு மத்திய அரசு  பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநர் பதவியை அளித்துள்ளது. இந்த பதவியை வைத்து தமிழிசை பெட்ரோல்-டீசல் விலையை கட்டுப்படுத்துவாரா? என்பது குறித்த சந்தேகம் பலருக்கு தோன்றியுள்ளது.



 
 
மத்திய அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், 'டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை சார்பில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் தமிழிசை செளந்தரராஜன் இன்று முதல் அடுத்து  வரும் 3 ஆண்டுகளுக்கு செயல்படுவார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பதவி எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்த பதவிக்கு பவர் இருக்கின்றதா? என்பதும் இன்னும் ஒருசில நாட்களில் தெரியவரும்