1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 25 அக்டோபர் 2017 (16:56 IST)

பாஜகவை ஆட்சியில் அமர்த்திவிட்டுதான் என் உயிர் போகும்; சபதம் எடுத்த தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் காவி ஆட்சி அமையும் காலம் வந்துவிட்டது. பாஜகவை ஆட்சியில் அமர்த்திவிட்டுதான் என் உயிர் போகும் என தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.


 

 
கரூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-
 
பாஜக என்றால் பொறுமையாக இருப்பார்கள் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் திருப்பி அடிக்கிற கூட்டம்தான். ஆவியை பார்த்து பயப்படுவதுபோல் காவியை பார்த்து பயப்படுகிறார்கள். தமிழகத்தில் காவி ஆட்சி அமையும் காலம் வந்துவிட்டது. பாஜகவை ஆட்சியில் அமர்த்திவிட்டுதான் என் உயிர் போகும் என்றார்.
 
இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
 
இணையதளத்தில் என்னை மோசமாக விமர்சிக்கின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது. சைபர் கிரைம் போலீஸார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.