வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 மே 2021 (16:56 IST)

கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் தமிழக அரசு வென்றுகாட்டும்… அமைச்சர் நம்பிக்கை!

தமிழக அரசு கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை வென்றுகாட்டும் என கூறியுள்ளார் பால்வளத்துறை அமைச்சர் மு நாசர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மு நாசர் ஆவடி மருத்துவமனையில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் கருவியை மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுடன் இணைந்து வழங்கினார். பின்னர் மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருகிறேன். கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், அதனை தமிழக அரசு வென்றுகாட்டும்’ எனக் கூறியுள்ளார்.