புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 மார்ச் 2021 (11:09 IST)

NIFT தேர்வை நாடு முழுவதும் நடத்த தமிழச்சி எம்.பி. கோரிக்கை!

NIFT என்னும் பேராசிரியர்களுக்கான தேர்வுகள் டெல்லியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என தமிழச்சி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார் 
 
சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த அறிவிப்பு ஒன்றில் NIFT என்ற பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என அறிவித்தது. NIFT எனப்படும் பேஷன் டெக்னாலஜி பேராசிரியர் பணிக்கான தேர்வை தேர்வை நாடு முழுவதும் ஏராளமானோர் எழுதவிருக்கும் நிலையில் இந்த தேர்வுக்கான மையம் டெல்லியில் மட்டுமே என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
 
இந்தியாவில் 16 இடங்களில் உள்ள NIFT கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்த அனைவரும் இந்த அறிவிப்பு காரணமாக தற்போது டெல்லி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் NIFT எனப்படும் பேஷன் டிசைனிங் பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று திமுக எம்பி தமிழச்சி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் நீட் தேர்வு எழுத அனைவரையும் டெல்லிக்கு அழைப்பது ஆபத்தானது என்றும் அதுமட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்த அறிவிப்பு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்