வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 2 ஜூன் 2019 (16:48 IST)

பஞ்சாபில் பரவும் தமிழ் பாடல் .. ஏ.ஆர். ரஹ்மானுக்குக் குவியும் பாராட்டுக்கள்

சமீபத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறியது. மோடி தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. 
பிரதமர் மோடி பதவியேற்ற அன்று புதிய கல்விக்கொள்கைகளை மத்திய மனித வள மேம்மாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் வெளியிட்டார்.484 பக்கங்கள் கொண்ட அந்த வரைவு அறிக்கையில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கவேண்டும். 6- 8 ஆம்வகுப்புவரையில் கன்னடா, சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்க வேண்டுமென்று  தெரிவித்திருந்தது.
 
இது நம் தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியத் தலைவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்துவருகின்றனர்.
 
இந்நிலையில் #StopHindiImposition மற்றும் #TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
 
இந்நிலையில் ஆஸ்கார் விருதுவென்ற ஏ ஆர் ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பஞ்சாபிலும் தமிழ் பரவுவதாக ஒரு டுவிட் செய்திருந்தார். அத்துடன் ஒரு பஞ்சாபி மரியான் படத்தில் வரும் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் என்ன என்ற பாடலை ஒருவர் பாடுவதாகத் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.இதற்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துவருகின்றனர்.