Daily Horoscope
✕

ஆட்சிக்கு வந்த திமுக: மீண்டும் மாறுகிறதா தமிழ் புத்தாண்டு?

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 30 நவம்பர் 2021 (14:34 IST)
பொங்கல் பரிசு பையில் ’இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
பொங்கல் பண்டிகையின் போது நியாய விலைக் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொடுக்கவுள்ள 20 இலவச பொருட்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த பொருட்களை வைத்து கொடுக்கப்படும் துணிப் பையில், ‘இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. 
 
இதனால் மீண்டும் மாறுகிறதா தமிழ் புத்தாண்டு தேதி எனும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆம், கடந்த 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தை மாதம் 1 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சித்திரை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். 
 
ஆனால் இப்போது திமுக ஆட்சிக்கு வந்திருப்பதாலும் பொருட்களை வைத்து கொடுக்கப்படும் துணிப் பையில் குறிப்பிடப்பட்டுள்ளதாலும் தமிழ் புத்தாண்டு தேதி மாறுகிறதா என சந்தேகம் கிளம்பியுள்ளது. இது குறித்து அரசு இன்னும் ஏதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 
 
ஆனால், 2022 ஆம் ஆண்டுக்கான அரசின் பொது விடுமுறை தேதிகளில் சித்திரை மாதம் 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். 

எல்லாம் காட்டு

வி.எஸ்.பாபு மறைவு!.. காலியான தொகுதிகள் 6-ஆக உயர்வு!...

வி.எஸ்.பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி...

கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் சம்பந்தம் இல்ல - நீதிமன்றத்தில் சொன்ன நிஷாந்த்...

எதிரிக்கு எதிரி நண்பன்.. விஜய்யை எதிர்க்க பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக...

பிரபாகரன் வீட்டிற்கு சென்ற திருமாவளவன்.. பாஜக கண்டனம்.. காங்கிரஸ் மெளனம்....

அடுத்த கட்டுரையில்
Show comments