வியாழன், 12 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 மே 2024 (11:10 IST)

ஜெய் ஜக்கம்மா நல்ல காலம் வருது.. தமிழ்நாடு வெதர்மேனின் மகிழ்ச்சியான அறிவிப்பு..!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவஸ்தையில் உள்ளனர் என்பதும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் வீட்டை விட்டு பலர் வெளியே வருவதில்லை என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
குறிப்பாக சென்னையின் முக்கிய சாலைகளில் கூட மதிய நேரத்தில் போக்குவரத்து குறைவாக இருக்கிறது என்றும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் கடும் வெப்பம் இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் பொதுமக்களை அவ்வப்போது திருப்தி செய்யும் வகையில் தமிழகத்தில் சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை கூட சென்னையில் மிதமான மழை பெய்தது என்பது தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்ததாக தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ’ஜெய் ஜக்கம்மா நல்ல காலம்   பொறக்க போகுது, கடும் கோடையிலும் வெயில் குறைய போகிறது, தமிழ்நாட்டில் நல்ல மழை வரப்போகுது’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
Edited by Mahendran