செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 மே 2022 (14:25 IST)

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.