கரூரில் மகாகவி பாரதியாருடன் அவரது மனைவி செல்லம்மாள் சிலை
எந்த ஊரில் பாரதியின் மனைவியை வரக்கூடாது என்றார்களோ அதே ஊரில் மகாகவி பாரதியாருடன் அவரது மனைவி செல்லம்மாள் சிலை – சிலைகளுக்கு வரவேற்பு கொடுத்த கரூர் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் திருக்குறள் பேரவை.
முண்டாசுக்கவிஞர் மகாகவி பாரதியார் மற்றும் அவரது மனைவி ஆகியோரது சிலைகளை வரவேற்ற கரூர் தமிழ் ஆர்வலர்கள்
வரும் 31 ம் தேதி தென்காசி மாவட்டம் கடையத்தில் வைக்கப்பட உள்ள மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் சிலை, சென்னையில் தொடங்கி ரதமாக செல்லம்மா பாரதி என்கின்ற பெயரில் கரூருக்கு வருகை தந்தது. அந்த ரதம் கரூர் ஜவஹர் கடைத்தெருவிற்கு இன்று மாலை வந்தடைந்தது. கரூர் திருக்குறள் பேரவை மற்றும் கரூர் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மகாகவி பாரதியார் மற்றும் அவரது மனைவி செல்லம்மா ஆகியோரது புகழை எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமை வகிக்க, ரதம் கரூர் நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக சென்று கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு சென்றடைந்தது. நாளை திண்டுக்கல் செல்ல உள்ள இந்த ரதம் விரைவில் தென்காசி மாவட்டம், கடையத்திற்கு சென்று சிலையை நிறுவ உள்ளனர். இந்நிகழ்ச்சியினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நட்த்த உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. முன்னதாக கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு இருந்த இந்த சிலைகளை திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன், ஆன்மீக அன்பர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வழிபட்டு சென்றனர். பெண்மைக்கு பெருமை சேர்க்கும் விதமாக பாரதி கண்ட புதுமை பெண் ஆக, அவரது மனைவியின் சிலையை ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள் பார்த்ததோடு மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாவை நினைவு கூர்ந்தனர்.