தாழ்வு மண்டலமாக வலுவடையும் சுழற்சி... கனமழைக்கு எச்சரிக்கை!
நாளை மறுநாள் (அக். 9 ஆம் தேதி) உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
வரும் அக்டோபர் 9 ஆம் தேதி, அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என முன்னரே தெரிவிக்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் அந்தமான் கடல், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.