1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (14:08 IST)

நீர்வீழ்ச்சியில் செஃஃபி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் !

kodaikanal
திண்டுக்கல் பெரும்பாறை அருகே புல்லாவெளி அருவியில் செல்ஃபி எடுத்த இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய காலத்தில் செல்போன் இல்லாத இளைஞர்களே கிடையாது. அதேபோல் இளைஞர்கள், காணும் இடத்தில் எல்லாம் அதன் பின் விளைவுகள் ஆபத்துகள் அறியாமல் செஃபி எடுத்து விபத்தில் மாட்டிக் கொள்கிறனர்.
 
அந்த வகையில், திண்டுக்கல் கொடைக்கானலில் பெரும்பாறை அருகே புல்லாவெளி அருவியில் ஆபத்தான முறையில்  புகைப்படம் எடுக்கும்போது,  ஒரு இளைஞர் தவறி விழுந்தார். அவரை தேடும் பணி தற்போது நடந்து வருகிறது.
 
இளைஞர் தவறி விழும்போது, எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட வேண்டாம் என சமூக வலைதளங்களில் நெட்டிசங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.