1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2024 (17:39 IST)

இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் மூவர்.. பிரிட்டன், அமெரிக்கர்கள்..!

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதியை முன்வைக்கும் துறைகளில் உலகளாவிய சமூகத்திற்கு முக்கியமான பங்களிப்புகளை வழங்கிய சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, சைமன் ஜான்சன், டாரன் அசோமோக்லு மற்றும் ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நாடுகளின் செழுமை குறித்து இடையிலான வேறுபாட்டிற்கான ஆராய்ச்சிக்கு இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.

ஜேம்ஸ் ராபின்சன், பிரிட்டனைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆக இருக்கிறார். சைமன் ஜான்சன், பிரிட்டன்-அமெரிக்க பொருளாதார நிபுணர். டாரன் அசோமோக்லு, துருக்கி-அமெரிக்க பொருளாதார வல்லுநர் என்பவராக உள்ளார்.

இவ்வாண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, தென் கொரியாவைச் சேர்ந்த ஹான் காங்க், வேதியியலுக்கான நோபல் பரிசு, டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோர் பெறுகின்றனர். மேலும் மனித மூளையைப் போல செயல்பட கணினிகளுக்கு கற்றுத் தரும் மெஷின் லேர்னிங் கண்டுபிடிப்புக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்பீல்டு மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவத்திற்கான நோபல் பரிசு, விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva