1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu's Northeast Monsoon Expected to Bring 20-35% Above-Normal Rainfall

இந்த ஆண்டு அடுத்தடுத்து புதிய புயல்கள் தோன்றும்; தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு..!

வடகிழக்கு பருவமழை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பை விட 20 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் கணித்துள்ளார்.
 
தமிழ்நாடு தனது ஆண்டு மழைப்பொழிவில் பெரும்பகுதியை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பெறுகிறது. இந்த பருவமழை அக்டோபர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இக்காலத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாவது வழக்கம். 
 
இந்த ஆண்டு இயல்பை விட 20% முதல் 35% வரை கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக: நவம்பர் மாதத்தின் பிற்பகுதியிலும், டிசம்பர் மாதத்தின் முற்பகுதியிலும் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும். இந்த புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் குறுகிய நேரத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
இன்னைக்கு இந்தியாதான் ஜெயிக்கணும்..! பாகிஸ்தான் தோக்கணும்! சிறப்பு யாகம் செய்த விஷ்வ ஹிந்து பரிஷத்!