16 மாவட்டங்களில் இன்றிரவு இரவு 7 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் சற்று முன்னர் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தது
இந்த நிலையில் இன்று இரவு 7 மணி வரை சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட 16 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Edited by Mahendran