1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 ஜூன் 2023 (16:32 IST)

சென்னையின் பல இடங்களில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி..!

சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று மதியம் மூன்று மணி அளவில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை அண்ணா சாலை தி.நகர் சைதாப்பேட்டை மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
அதேபோல் நுங்கம்பாக்கத்திலும் கனமழை பெய்து வருவதாகவும் இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னையில் இன்று காலையில் லேசான வெயில் அடித்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva