1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 நவம்பர் 2023 (12:42 IST)

சாலை விபத்துகளில் தமிழ்நாடு நம்பர் ஒன்: மத்திய சாலைப் போக்குவரத்து துறை தகவல்!

Accident
சாலை விபத்துகளில் தமிழ்நாடு தான் நம்பர் ஒன் என மத்திய சாலை போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக சாலை விபத்துக்கள் நிகழ்ந்த மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு சாலை விபத்து குறித்த அறிக்கையில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த அறிக்கையின்படி  இந்தியாவில் கடந்த ஆண்டு 4,61,312 சாலை விபத்துக்கள் நடந்துள்ள நிலையில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர், 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர்.  பொறுப்பேற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், மது போதையில் வாகனம் ஓட்டுதல், விதிகளை மீறி வாகனம் ஓட்டுதல் ஆகியவை காரணமாகத்தான் விபத்துக்கள் நேர்ந்துள்ளது.

சாலை விபத்துகளில் தமிழ்நாட்டில் மட்டும் 64,105  விபத்துக்கள் ஏற்பட்டு 2022 ஆம் ஆண்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மத்திய பிரதேசம், மூன்றாவது இடத்தில் கேரளா, நான்காவது இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது.  

சாலை விபத்துக்கள் குறித்த பல்வேறு அம்சங்கள் மற்றும் காரணங்களை ஆய்வு செய்து சாலை விபத்துகளை குறைக்க மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பட்டியல் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran