திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 மே 2023 (12:56 IST)

நந்தினியின் உயர்கல்வி செலவை அரசு ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

பிளஸ் டூ தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் வாங்கிய நந்தினியின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
 
நேற்று பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியான நிலையில் அதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி என்ற மாணவி தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று 600க்கு 600 என்ற மதிப்பெண்ணை பெற்றுள்ளார். 
 
இதனை அடுத்து அந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இன்று அவர் தமிழக முதல்வரை சந்தித்து ஆசி பெற்றார். இந்த சந்திப்பின்போது தனது உயர்கல்வி செலவை தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதல்வர் தன்னிடம் கூறியதாகவும் அதற்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். 
 
தனது சார்பிலும் தனது குடும்பத்தின் சார்பிலும் தனது பள்ளி நிர்வாகம் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன் என்றும் தனது விடா முயற்சி மற்றும் கடினமான உழைப்பு காரணமாகத்தான் இந்த வெற்றி தனக்கு கிடைத்ததாகவும் நந்தினி செய்தியாளர்களிடம் கூறினார்.
 
Edited by Siva