புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (10:43 IST)

சரக்கு, பெட்ரோல், டீசல் வரி... ஓஹோனு சம்பாதிக்கும் தமிழக அரசு!!

தமிழகத்தின் வணிக வருவாய் கடந்த ஐந்து ஆண்டுகளை விட இந்த ஆண்டு 20% அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவை வணிக வரித்துறை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் வணிக வரி வருவாய் அதிகரித்துள்ளது. 2018 - 2019 ஆம் நிதியாண்டில், ரூ.87,905 கோடியாக அதிகரித்த தமிழக வணிக வருவாய், கடந்த 2017 - 2018 ஆம் நிதியாண்டில் ரூ.73,148 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த வருவாய் அதிகரிப்புக்கு மது மற்றும் எரிபொருள் மீதான வாட் வரி அதிகம் வசூலிக்கப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. 2018 - 2019 நிதியாண்டில் மட்டும் மது மற்றும் எரிபொருள் விற்பனையின் மூலம் ரூ.42,415 கோடி வரி வசூலாகியுள்ளதாக தெரிகிறது. இந்த தொகை, தமிழகத்தின் மொத்த வணிக வரி வருவாயில் 48% என்பது கூடுதல் தகவல்.