வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2025 (14:23 IST)

இன்றும் காந்திஜி தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி..!

governor ravi
இன்று தேசப்பிதா காந்திஜி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் உள்ள காந்திஜியின் சமாதிக்கு பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு காந்திஜிக்கு உரிய மரியாதை செலுத்தவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி தனது சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தமிழில் செய்த பதிவு இதோ:

"காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 -ஆம் ஆண்டு கே. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட  பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும்.

காந்தி நினைவு நிகழ்வுகளை - அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை - நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?

 தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன.

காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?" - ஆளுநர் ரவி

Edited by Mahendran