1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (15:34 IST)

இன்று தமிழ்நாடு நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

stalin
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வழியாக உரையாற்றியுள்ளார்/ இந்த உரையில் அவர் கூறியிருப்பதாவது:
 
எந்த விழாவாக இருந்தாலும் தமிழ்நாடு திருநாள் என்ற விழாவுக்கு ஈடு இணை இல்லை.  கலைவாணர் அரங்குக்கே நேரடியாக வந்து விழாவில் பங்கேற்க முடியவில்லை என்பதே எனது ஒரே வருத்தம்.  கொரோனா தொற்று முழுவதும் நீங்கிவிட்டது என்றாலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வு எடுத்து வருகிறேன்.
 
கொரோனா தொற்று என்பதால் அது பரவாமல் இருக்க நம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தொற்று நீங்கிவிட்டாலும் சில நாட்களாவது ஓய்வு எடுக்க வேண்டும். தமிழ்நாடு திருநாளை தள்ளி வைக்க இயலாது என்பதால் காணொலி மூலமாக பேச வேண்டும் என முடிவு எடுத்தேன். காணொலி மூலம் பேசுவதால் உடல் சோர்வு நீங்கிவிட்டதாக கருதுகிறேன். தமிழ்நாடு நாள் என்று சொல்லும்போதே என் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.  திமுக அமைந்த காரணத்தால்தான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட முடிந்தது. திமுக ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலேயே போயிருக்கும் செம்மொழி என்ற தகுதியை பெற்றுத்தந்தது திமுக ஆட்சியின் சாதனை.
 
உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள இனம் தமிழ் இனம்.'திமுக ஆட்சிக்கு அமர்ந்த பின் தான் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது, இல்லாவிடில் உ.பி, ம.பி என்பது போல தமிழ்நாடும் இன்று சென்னை பிரதேசம் என்றே அடையாள படுத்த பட்டிருக்கும். மாநிலத்தில் சுயாட்சியை அமைவது தான் இந்தியாவின் ஒற்றுமையை காக்கும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்லும் போது கள்ளக்குறிச்சி வன்முறை வேதனை தருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர். சோகமான சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு சிலர் சட்ட விரோத செயலில் ஈடுபடுவது வளர்ச்சிக்கு எதிரானது. பள்ளிகள், ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது 
 
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.