1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2016 (00:17 IST)

முதலமைச்சர் உடல்நிலை எதிரொலி - அப்பல்லோவில் வித்யாசாகர் ராவ்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தடைந்தார்.


 

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு மாத காலங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ நிர்வாகம் கூறியது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து கடந்த 19ஆம் தேதி அன்று சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்று மாலை திடீரென அவசர சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

இதனையடுத்து பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு இரவு 11.50 மணி வந்தடைந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.