தமிழக முதல்வர் பரப்புரை சென்ற சாலையில்...வெடிகுண்டுடன் நின்றிருந்தவர் கைது!!

கோப்புப்படம்
Sinoj| Last Updated: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (16:32 IST)

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலுக்கான அனைத்துக் கட்சியினரும் தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில்,
தமிழக முதல்வர் பரப்புரை சென்ற சென்னை – அரக்கோணம் சாலையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுடன் நின்றிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மர்ம நபர் வந்த வாகனம் மக்கள் மீது மோதி பலர் காயமடைந்தனர். அந்த வாகனத்தை மக்கள் சிறைப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைந்தனர். மேலும் பேராணாம்பட்டு என்ற பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த நபரைப் கைது போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழக முதல்வர் பரப்புரை சென்ற சென்னை – அரக்கோணம் சாலையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுடன் நின்றிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :