செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (14:22 IST)

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர்

bus
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறதா? என்பது குறித்து அமைச்சர் சிவ சங்கர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
 
தமிழகத்தில் பேருந்து கட்டணம் விரைவில் உயரும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்
 
தமிழகத்தில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 
 
நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கடும் நஷ்டத்தில் போக்குவரத்து துறை இயங்கி வரும் நிலையில் நஷ்டத்திலிருந்து துறையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran