ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (17:10 IST)

'பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் புகார்.. தமிழக பாஜக அதிரடி..!

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது தமிழக பாஜக, ஆந்திரா டிஜிபியிடம் புகார் அளித்திருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலில் வணங்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் நெய் கலக்கப்படாமல், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், இது குறித்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைதளங்களில் இது குறித்து மீம்ஸ்கள், வீடியோக்கள், கருத்துக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில், பரிதாபங்கள் யூடியூப் சேனலிலும் இதைப் பற்றி வீடியோ பதிவானது. ஆனால் சில மணி நேரத்தில் அந்த யூடியூப் வீடியோ நீக்கப்பட்டு, வருத்தம் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 'லட்டு பாவங்கள்' என்ற பெயரில் வெளியான வீடியோ நீக்கப்பட்டாலும், இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துவிட்டதாகவும், எனவே அந்த சேனல் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் ஆந்திர டிஜிபி என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Edited by Siva