1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (08:00 IST)

முன்னாள் மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்னர்  ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதியினரின் இந்த பிரிவுக்கு ஆர்த்திதான் காரணம் என்றும், அவர் ஜெயம் ரவி மேல் சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்து டார்ச்சர் செய்ததால்தால் இந்த முடிவை எடுத்தார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஜெயம் ரவி கோவாவைச் சேர்ந்த பாடகி ஒருவரோடு இப்போது டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் இந்த நெருக்கம்தான் விவாகரத்துக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஜெயம் ரவி அதை மறுத்துள்ளார்.

இந்நிலையில் ஜெயம் ரவி தனது முன்னாள் மனைவி ஆர்த்தி மீது போலீஸில் புகாரளித்துள்ளார். அதில் “சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஆர்த்தியின் வீட்டில் உள்ள எனது உடைமைகளைக் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். அதை மீட்டுத்தரவேண்டும்” என அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஜெயம் ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.