1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamil nadu arts and science college application

தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புக்கு குவியும் விண்ணப்பங்கள்!

college
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பொறியியல் கல்லூரிகளுக்கு பெறும் விண்ணப்பங்கள் குறைந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் விண்ணப்பங்கள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
கடந்த 4 ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் கலை அறிவியல் கல்லூரிகளில் அதிக விண்ணப்பங்கள் வந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் 4.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளன
 
அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2.3 லட்சம் இடங்களுக்கு இதுவரை 2.11 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்று ஒரே நாளில் 264 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை: அதிர்ச்சி தகவல்